TNPSC Thervupettagam

தேசிய இணையவெளி ஒருங்கிணைப்பு மையம் (National Cyber Coordination Centre - NCCC)

August 11 , 2017 2716 days 1024 0
  • தேசிய இணையவெளி ஒருங்கிணைப்பு மையத்தின் முதல் கட்ட இயக்கம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. நாட்டின் இணைய வெளி பாதுகாப்பை உறுதி செய்வதும் , அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து சரிசெய்வதும் இதன் முக்கிய நோக்கம் ஆகும் .
  • இதற்காக நாட்டின் இணைய தள போக்குவரத்துகளை இந்த மையம் கண்காணிக்கிறது. அச்சுறுத்தல்களைக் கண்டறிந்துச் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கும்படி இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும், பிற நிறுவனங்களுக்கும் தகவல் அளிக்கிறது.
  • மேலும் மக்களின் மென்பொருள் சாதனங்களில் பாட்நெட் போன்ற தீய மென்பொருள்களைக் கண்டறிந்து , அவற்றைச் சரி செய்யும் வசதியுடன் கூடிய மையம் (Botnet and Malware Cleaning Center) ஒன்றையும் தொடங்கியுள்ளது.
  • செயல்படுத்தும் நிறுவனம்: CERT-In (Computer Emergency Response Team - CERT-In). CERT-In என்பது கணினி மற்றும் இணையதளம் தொடர்பான அவசர நிலைகளைக் கையாள்வதற்காகத் தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (Ministry of Electronics and Information Technology - MeiTY) கீழ் அமைக்கப்பட்ட குழு ஆகும். இந்தக் குழுவின் அதிகாரங்களும் உரிமைகளும், 2000 ஆவது ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (Information Technology Act, 2000) ‘69B’ பிரிவில் இருந்து பெறப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்