தேசிய இணையவெளி ஒருங்கிணைப்பு மையம் (National Cyber Coordination Centre - NCCC)
August 11 , 2017 2661 days 972 0
தேசிய இணையவெளி ஒருங்கிணைப்பு மையத்தின் முதல் கட்ட இயக்கம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. நாட்டின் இணைய வெளி பாதுகாப்பை உறுதி செய்வதும் , அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து சரிசெய்வதும் இதன் முக்கிய நோக்கம் ஆகும் .
இதற்காக நாட்டின் இணைய தள போக்குவரத்துகளை இந்த மையம் கண்காணிக்கிறது. அச்சுறுத்தல்களைக் கண்டறிந்துச் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கும்படி இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும், பிற நிறுவனங்களுக்கும் தகவல் அளிக்கிறது.
மேலும் மக்களின் மென்பொருள் சாதனங்களில் பாட்நெட் போன்ற தீய மென்பொருள்களைக் கண்டறிந்து , அவற்றைச் சரி செய்யும் வசதியுடன் கூடிய மையம் (Botnet and Malware Cleaning Center) ஒன்றையும் தொடங்கியுள்ளது.
செயல்படுத்தும் நிறுவனம்: CERT-In (Computer Emergency Response Team - CERT-In). CERT-In என்பது கணினி மற்றும் இணையதளம் தொடர்பான அவசர நிலைகளைக் கையாள்வதற்காகத் தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (Ministry of Electronics and Information Technology - MeiTY) கீழ் அமைக்கப்பட்ட குழு ஆகும். இந்தக் குழுவின் அதிகாரங்களும் உரிமைகளும், 2000 ஆவது ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (Information Technology Act, 2000) ‘69B’ பிரிவில் இருந்து பெறப்படுகிறது.