தேசிய இயற்கை வேளாண்மைத் திட்டத்தினை (NMNF) ஒரு முழுமையான மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டமாகத் தொடங்குவதற்கு மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை அளித்துள்ளது.
15வது நிதி ஆணையத்தின் காலம் வரையில் (2025-26), இந்தத் திட்டத்தின் மொத்தச் செலவினம் ஆனது 2481 கோடி ரூபாய் (ஒன்றிய அரசின் பங்கு - 1584 கோடி ரூபாய்; மாநில அரசின் பங்கு - 897 கோடி ரூபாய்) ஆகும்.
அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் மிகவும் சத்தான உணவை வழங்குவதற்கான இயற்கை வேளாண்மை நடைமுறைகளை மேம்படுத்துவதை NMNF ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
சாகுபடிக்கான உள்ளீட்டுச் செலவைப் பெருமளவு குறைப்பதற்கும், இடுபொருட்களை வாங்குவதற்கு வெளிப்புற மூலங்களைச் சார்ந்திருப்பதனை நன்கு குறைப்பதற்கும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.