TNPSC Thervupettagam

தேசிய இயற்கை வேளாண்மைத் திட்டம்

December 2 , 2024 27 days 109 0
  • தேசிய இயற்கை வேளாண்மைத் திட்டத்தினை (NMNF) ஒரு முழுமையான மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டமாகத் தொடங்குவதற்கு மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை அளித்துள்ளது.
  • 15வது நிதி ஆணையத்தின் காலம் வரையில் (2025-26), இந்தத் திட்டத்தின் மொத்தச் செலவினம் ஆனது 2481 கோடி ரூபாய் (ஒன்றிய அரசின் பங்கு - 1584 கோடி ரூபாய்; மாநில அரசின் பங்கு - 897 கோடி ரூபாய்) ஆகும்.
  • அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் மிகவும் சத்தான உணவை வழங்குவதற்கான இயற்கை வேளாண்மை நடைமுறைகளை மேம்படுத்துவதை NMNF ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சாகுபடிக்கான உள்ளீட்டுச் செலவைப் பெருமளவு குறைப்பதற்கும், இடுபொருட்களை வாங்குவதற்கு வெளிப்புற மூலங்களைச் சார்ந்திருப்பதனை நன்கு குறைப்பதற்கும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்