தேசிய இரயில் அருங்காட்சியகம் - புரிந்துணர்வு ஒப்பந்தம்
December 14 , 2018 2171 days 716 0
தேசிய தலைநகரப் பகுதியான தில்லியின் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இந்திய இரயில்வேயின் தேசிய இரயில் அருங்காட்சியகமானது தில்லியின் மேடம் துசாட்ஸ் மெழுகு அருங்காட்சியகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இது அருங்காட்சியக ஒத்துழைப்பில் நாட்டின் முதலாவது அரசு-தனியார் பங்களிப்பு கூட்டு முயற்சியாகும்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தேசிய ரயில்வே அருங்காட்சியகத்தின் பார்வையாளர்கள் புது தில்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் மெழுகு அருங்காட்சியகத்திற்குச் சென்றால் அவர்களுக்கு மொத்தத் தொகையில் 35% சிறப்பு சலுகை அளிக்கப்படும்.
மேலும் பள்ளிக் குழந்தைகளுக்கும் இது போன்ற சலுகைகள் அளிக்கப்படுகின்றன.
இந்தியாவின் முதலாவது மெழுகு அருங்காட்சியகம் மேடம் துசாட்ஸ் மெழுகு அருங்காட்சியகமாகும்.
இது இலண்டனில் உள்ள புகழ்பெற்ற மேடம் துசாட்ஸின் 23-வது மெழுகு அருங்காட்சியகமாகும். இது 2017-ல் ஆரம்பிக்கப்பட்டது.