சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு, 25வது தேசிய இளைஞர் விழாவை நடத்துவதற்கான இடமாக புதுச்சேரியை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தேர்வு செய்துள்ளார்.
புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள ‘பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபம்' எனப் படும் திறந்தவெளி அரங்கத்துடன் கூடிய ஒரு நவீன அரங்கத்தினையும் அவர் திறந்து வைத்தார்.
தேசிய இளைஞர் விழாவானது 1995 ஆம் ஆண்டில் தேசிய ஒருங்கிணைப்பு முகாமினால் நடத்தப்பட்ட நிகழ்வின் கீழ் ஒரு மாபெரும் நிகழ்ச்சியாக தொடங்கப் பட்டது.
இது மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் மாநில அரசுகளுள் ஒன்றின் உதவி ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப் படுகிறது.