TNPSC Thervupettagam

தேசிய இளையோர் தினம் - ஜனவரி 12

January 15 , 2025 2 days 42 0
  • இந்திய அரசானது, இந்தியச் சமூகத்திற்கு விவேகானந்தர் அவர்கள் ஆற்றியப் பெரும் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் 1984 ஆம் ஆண்டில் சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்தநாளை தேசிய இளையோர் தினமாக அறிவித்தது.
  • சுவாமி விவேகானந்தரின் இலட்சியவாத தத்துவங்கள் மற்றும் போதனைகளைப் பரப்புவதையும், இளையோர்கள் அவரது கொள்கைகளைப் பின்பற்ற ஊக்குவிக்கப் படுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இளையோர்கள் என வரையறுக்கப்படுகின்ற 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 40% உள்ளனர்.
  • இந்த ஆண்டு மட்டும், இந்தியா முழுவதிலுமிருந்து சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களிடமிருந்து தகுதி அடிப்படையிலான, பல்நிலைச் செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப் பட்ட சுமார் 3,000 துடிப்பு மிகு இளம் தலைவர்களுடன் பிரதமர் உரையாடினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்