டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனையினைக் கௌரவிக்கும் வகையில் இந்திய தடகள கூட்டமைப்பு இந்த தேதியை நியமித்தது.
இந்தத் தினமானது அவரது சாதனையை அங்கீகரித்து, நாடு முழுவதும் ஈட்டி எறிதல் விளையாட்டை ஊக்குவிக்கிறது.
2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 07 ஆம் தேதியன்று, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வரலாறு படைத்தார்.
இந்த வெற்றியானது, ஒலிம்பிக் போட்டிகளின் தடகளப் போட்டிகளில் இந்தியாவிற்குக் கிடைத்த முதல் தங்கப் பதக்கத்தினைக் குறிக்கிறது.