TNPSC Thervupettagam

தேசிய உயிர்மருந்துப் பொருள் திட்டம்

May 3 , 2018 2271 days 677 0
  • தேசிய உயிர்மருந்துப் பொருள் திட்டத்தின் கீழ் உயிர் மருந்துப் பொருட்களின் முன் கூட்டிய மேம்பாட்டை நோக்கிய ஆராய்ச்சியை துரிதப்படுத்துவதற்காக மத்திய அரசு உலக வங்கியுடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்த ஒப்பந்தமானது பின்வரும் நிறுவனங்களுக்கிடையே கையெழுத்து ஆகியுள்ளது.
    • திட்ட செயல்படுத்து அமைப்பு, உயிரி தொழில்நுட்ப தொழில்துறை ஆராய்ச்சி உதவிக் கழகம் (உயிரி தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனம்).
    • பொருளாதார விவகாரங்கள் துறை, நிதி அமைச்சகம்.
    • உலக வங்கி சார்பாக மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான சர்வதேச வங்கி.
  • தேசிய உயிர்மருந்துப் பொருள் திட்டம் ஆனது இந்தியாவில் மருந்துப் பொருள் மேம்பாட்டை அதிகப்படுத்துவதற்கான முதல் தொழில்துறை – கல்வியியல் திட்டமாகும். இத்திட்டத்திற்கு இந்தியாவில் புத்தாக்கு (Innovate in India – i3) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • உலக வங்கியின் 50% கடன் உதவியுடன் ஐந்து ஆண்டு காலத்திற்கு 250 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் 2017 ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது.
  • உயர்ந்த, மலிவான விலையில் கிடைக்கக் கூடிய உயிரி மருந்துப் பொருளின் திறனான வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையமாக இந்தியாவை உருவாக்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்