- இந்தியாவில் ஆண்டுதோறும் பிப்ரவரி 12ஆம் தேதி அன்று தேசிய உற்பத்தித்திறன் (Productivity) தினமும், பிப்ரவரி 12 முதல் 18 ஆம் தேதி வரை தேசிய உற்பத்தி திறன் வாரமும் தேசிய உற்பத்தித்திறன் குழுவால் (National Productivity Council) கொண்டாடப்படுகின்றது.
- 2018ஆம் ஆண்டிற்கான தேசிய உற்பத்தித்திறன் வாரத்தின் கருத்துரு “தொழிற்சாலை0 இந்தியாவிற்கான முன்னேறும் வாய்ப்புகள்“ (Industry 4.0 Leap Frog opportunity for India).
- தொழிற்துறையின் உற்பத்திப் பொருட்கள், மதிப்புக் கூட்டு சங்கிலிகள் (Value Chains) மற்றும் வணிக மாதிரிகள் போன்றவற்றினுடைய உட்தொடர்பை அதிகரிப்பதும், அவற்றின் டிஜிட்டல் மயமாக்கலை அதிகரிப்பதும் இந்த ‘தொழிற்சாலைகள்0’ தொடக்கத்தின் நோக்கமாகும்.
தேசிய உற்பத்தித்திறன் குழு
- தேசிய உற்பத்தித்திறன் குழுவானது (National Productivity Council-NPC) இலாப நோக்கற்ற, திட்டப் பணி சார்ந்த (Mission Oriented) ஓர் உச்ச, தன்னாட்சியுடைய அமைப்பாகும்.
- இது 1958 ஆம் ஆண்டு மத்திய தொழிற்துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது.
- இவ்வாண்டு இக்குழு தன்னுடைய 60வது நிறைவு ஆண்டை கொண்டாடி வருகின்றது.
- இந்தியப் பொருளாதாரத்தின் அனைத்து துறைகளின் உற்பத்தித் திறன்களுக்கான காரணிகளை (Causes of Productivity) மேம்படுத்துவதே இக்குழுவின் நோக்கமாகும்.
- டோக்கியோவை தலைமையிடமாகக் கொண்ட, அரசுகளுக்கிடையேயான அமைப்பான ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (Asian Productivity Organization) ஓர் உள்ளடக்கப் பிரிவே தேசிய உற்பத்தித்திறன் குழுவாகும்.
- இந்தியா இந்த அமைப்பின் நிறுவன உறுப்பினராகும்.