TNPSC Thervupettagam

தேசிய ஊட்டச்சத்து திட்டம்

December 2 , 2017 2422 days 808 0
  • நாட்டிலுள்ள குழந்தைகளிடையேயான வளர்ச்சி குன்றல் (stunting) மற்றும் ஊட்டச்சத்தின்மை (malnutrition) போன்ற பிரச்சினைகளை களைந்து அவற்றை ஒவ்வொரு ஆண்டும்  2 சதவீதம்   குறைப்பதற்கு   தேசிய ஊட்டச்சத்து திட்டத்தை கொண்டுவர மத்திய கேபினேட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • 4 சதவீதம் என்ற நிலையிலுள்ள குழந்தைகளுக்கிடையேயான வளர்ச்சி குன்றலின் தற்போதைய நிலையை 2022-இல் 25 சதவீதமாக குறைத்தலே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
  • நிதி ஆயோக் அமைப்போடு இணைந்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கூட்டிணைவால் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.
  • அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு செயல்படுத்தும் வண்ணம் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.
  • மகளிர், இளங்குழந்தைகள் மற்றும் இளம் பெண்கள் ஆகியோரிடையேயான இரத்த சோகையை (anaemia) ஆண்டுக்கு 3 சதவீதம் என்ற அளவில் குறைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டம் நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் செயல்படுத்தப்படும்.
  • ஆரம்ப கட்டமாக நடப்பு நிதி ஆண்டில் ஊட்டச்சத்து இன்மை, குழந்தை வளர்ச்சி இன்மையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 315 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்