சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று ராஜஸ்தானில் ஜின்ஜீனு என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய ஊட்டச்சத்துத் திட்டத்தை (National Nutrition Mission-NMM) பிரதமர் துவக்கி வைத்தார்.
ஊட்டச்சத்துத் தொடர்பாக பல்வேறு அமைச்சகங்களில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு வழிகாட்டவும், அவற்றிற்கு இலக்குகளை நிர்ணயிக்கவும், அவற்றை கண்காணிக்கவும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட ஓர் உச்ச அமைப்பே தேசிய ஊட்டச்சத்துத் திட்ட அமைப்பாகும்.
நாட்டில் ஊட்டச்சத்துத் குறைவை களைவதற்காக ஏற்படுத்தப்பட்ட பல்வேறுத் திட்டங்களை இந்த அமைப்பு கண்காணிக்கும்.
4 சதவீதம் என்ற நிலையிலுள்ள குழந்தைகளுக்கிடையேயான வளர்ச்சிக் குன்றலின் தற்போதைய நிலையை 2022-இல் 25 சதவீதமாகக் குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
நிதி ஆயோக் அமைப்போடு இணைந்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டிணைவால் இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது.