தேசிய ஊட்டச்சத்து வாரம் – செப்டம்பர் 01/07
September 3 , 2020
1485 days
605
- இந்தியாவானது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் (செப்டம்பர் 01 முதல் 07 வரை) முதலாவது வாரத்தில் தேசிய ஊட்டச்சத்து வாரத்தை அனுசரிக்கின்றது.
- இந்த நிகழ்வானது 1982 ஆம் ஆண்டில் மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியத்தினால் தொடங்கப் பட்டுள்ளது.
- இது நமது உடலிற்கான ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- 2020 ஆம் ஆண்டின் தேசிய ஊட்டச்சத்து வாரத்தின் கருத்துரு, “சரியான உணவு உட்கொள், நன்றாக மென்று சாப்பிடு” என்பதாகும்.
Post Views:
605