TNPSC Thervupettagam

தேசிய எரிசக்தி வளங்காப்புத் தினம் - டிசம்பர் 14

December 19 , 2024 3 days 71 0
  • இது அன்றாட வாழ்வில் ஆற்றல் சேமிப்பின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள எரிசக்தி செயல்திறன் வாரியம் (BEE) ஆனது, இந்தியாவில் ஆற்றல் செயல்திறன் மற்றும் வளங்காப்பினை மேம்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்கிறது.
  • இந்த ஆண்டு அனுசரிப்பின் போது, ​​பல்வேறு பிரிவுகளில் தேசிய எரிசக்தி வளங்காப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
  • தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் நிறுவனமானது காகிதம் மற்றும் கூழ் தொழில் துறை பிரிவில் விருதை வென்றது.
  • காஞ்சிபுரத்தில் உள்ள SMR ஆட்டோமோட்டிவ் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஆனது நெகிழித் தொழில் துறை பிரிவில் விருதை வென்றது.
  • சென்னையில் உள்ள தாஜ் கிளப் ஹவுஸ் மற்றும் தி ரெசிடென்சி ஆனது கட்டிட வகையின் தங்கும் விடுதிகள் துறைகளில் தகுதிச் சான்றிதழை/விருதுகளைப் பெற்று உள்ளன.
  • சென்னையின் SBOA பள்ளி மற்றும் இளநிலைக் கல்லூரி (தமிழ்நாடு) 2024 ஆம் ஆண்டு எரிசக்தி வளங்காப்பு குறித்தத் தேசிய அளவிலான ஓவியப் போட்டியில் பாராட்டுப் பரிசினைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்