- மத்திய மின் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள எரிசக்தி திறன் அமைப்பானது (BEE - Bureau of Energy Efficiency) இத்தினக் கொண்டாட்டங்களுக்குத் தலைமை தாங்குகின்றது.
- இத்தினமானது 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப் படுகின்றது. எரிசக்தியைப் பாதுகாத்து அதனை சேமிப்பதில் அரசின் சாதனைகளை எடுத்துக் காட்டுவதே இந்தத் தினத்தின் நோக்கமாகும்.
- எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி செயல்திறனை மேம்படுத்துவதற்கான திட்டங்கள்:
- எரிசக்திப் பாதுகாப்பு கட்டிடக் குறியீடு (Energy Conservation Building Codes - ECBC)
- செயல்படுத்து, இலக்கை அடை மற்றும் வர்த்தகம் செய் என்ற திட்டம் (Perform Achieve and Trade Scheme - PAT)
- உஜாலா திட்டம்
BEE பற்றி
- இது 2002 ஆம் ஆண்டு மார்ச் 1 அன்று நிறுவப் பட்டது.
- இதன் தலைமையகம் புது தில்லியில் உள்ளது.
- சட்டம் - எரிசக்திப் பாதுகாப்புச் சட்டம், 2001.
- இது ஒரு சட்டரீதியான அமைப்பாகும்.
- பொறுப்பு - எரிசக்தித் திறன் மற்றும் பாதுகாப்பை ஊக்குவித்தல்.
தேசிய எரிசக்தி பாதுகாப்பு வாரம்
- தேசிய எரிசக்திப் பாதுகாப்பு வாரமானது ஆண்டுதோறும் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கொண்டாடப் படுகின்றது.