தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினம் 2023 – ஆகஸ்ட் 04
August 10 , 2023 475 days 208 0
2012 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் முதல் வாரமானது தேசிய எலும்பு மற்றும் மூட்டு வாரமாக அனுசரிக்கப் படுகிறது.
ஆனால், நாடு முழுவதும் வருடாந்திர அடிப்படையில் அனுசரிக்கப்படும் இந்த சுகாதாரப் பிரச்சாரம் ஆனது இந்திய எலும்பியல் சங்கத்தினால் (IOA) 2021 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துருவானது, ‘ஒவ்வொரு நபரும் ஒருவரைக் காப்பதற்காகப் பயிற்சி பெறுதல்’ என்பதாகும்.
எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியம் மோசமடைவதற்கான முக்கியக் காரணங்கள், அத்தியாவசிய உடல் செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை, வைட்டமின் D நிறைந்த சரியான ஊட்டச்சத்து இல்லாமை, மது அருந்துதல், புகையிலை மெல்லுதல் மற்றும் புகைபிடித்தல் போன்ற பழக்கங்கள் மற்றும் இளம் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்கள் கால்சியம் உட்கொள்ளாமை ஆகியவையாகும்.
கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற எலும்புகளுக்கு நன்மை பயக்கும் ஊட்டச் சத்துக்களை வழங்கும் முக்கிய உணவு மூலங்கள் பால் பொருட்கள் ஆகும்.
தயிர் அல்லது மென்மையான பாலாடைக்கட்டி போன்ற புளித்தப் பால் பொருட்கள், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் புரதம் ஆகியவற்றிற்கான முக்கிய உணவு மூலங்கள் ஆகும்.