TNPSC Thervupettagam

தேசிய ஒருங்கிணைப்பு தினம் - நவம்பர் 19

November 24 , 2022 639 days 279 0
  • இது இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் பிறந்தநாளை நினைவு கூரும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
  • இது ஒற்றுமை, அமைதி, அன்பு மற்றும் சகோதரத்துவத்தைப் பேணுவதற்கு மக்களை ஊக்குவிப்பதற்கான ஒரு தினமாகும்.
  • இந்திரா காந்தி அவர்கள் 'இந்தியாவின் இரும்புப் பெண்மணி' என்று அழைக்கப் பட்டார்.
  • இந்திரா காந்தி அவர்கள் 1917 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதியன்று உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அலகாபாத்தில் பிறந்தார்.
  • அவர் 1959 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • 1971 ஆம் ஆண்டில் மிக உயரிய குடிமை விருதான 'பாரத ரத்னா' மற்றும் 1984 ஆம் ஆண்டில் லெனின் அமைதிப் பரிசு ஆகிய விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டன.
  • இலண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அவருக்கென மெழுகுச் சிலை நிறுவப்பட்ட முதல் பெண்மணிகளில் இந்திரா காந்தியும் ஒருவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்