TNPSC Thervupettagam

தேசிய ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது - சாந்தி பிரசாத் பட்

October 18 , 2019 1746 days 621 0
  • பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரும் சிப்கோ இயக்கத்தின் முன்னோடியுமான சாந்தி பிரசாத் பட் என்பவருக்கு தேசிய ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த விருதானது மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக காங்கிரஸ் கட்சியால் நிறுவப்பட்டுள்ளது.
  • “நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிப்பதிலும் பாதுகாப்பதிலும் அவர் ஆற்றிய சேவைகளுக்காக” 2017 மற்றும் 2018 ஆண்டுகளுக்கான இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சி. பி. பட் பற்றி
  • அவர் தஷோலி கிராம் ஸ்வராஜ்ய சங்கத்தின் கூட்டுறவு அமைப்பை நிறுவியதோடு, 1973 ஆம் ஆண்டில் உத்தரகாண்ட் மாநிலத்தின் மண்டலில் முதலாவது சிப்கோ இயக்கத்தை வழிநடத்தினார்.
  • இவர் சமூகத் தலைமைத்துவத்திற்காக 1982 ஆம் ஆண்டில் ரமோன் மாக்சேசே விருதும் 1986 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2005 ஆம் ஆண்டில் பத்ம பூசண் விருதையும் 2013 ஆம் ஆண்டில் காந்தி அமைதிப் பரிசையும் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்