இது இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
'இந்தியாவின் இரும்புப் பெண்மணி' என்று பிரபலமாக அறியப்பட்ட இந்திரா காந்தி அவர்கள் 1917 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதியன்று அலகாபாத்தில் பிறந்தார்.
தேசிய ஒருமைப்பாட்டுத் தினம் 1985 ஆம் ஆண்டில் அதிகாரப் பூர்வமாக அறிமுகப் படுத்தப் பட்டது.
இது நாட்டின் பன்முகத் தன்மையைக் கொண்டாடுவதோடு, தேசத்தின் மகத்தான ஒரு நன்மைக்காக ஒன்றாக இணைந்துப் பணியாற்றுவதன் பெரும் முக்கியத்துவத்தையும் அங்கீகரிக்கிறது.
அவர் 1966 முதல் 1977 ஆம் ஆண்டு வரையிலும், மீண்டும் 1980 முதல் 1984 ஆம் ஆண்டில் அவரது சோகமான படுகொலை வரையிலும் நாட்டின் பிரதமராகப் பணியாற்றினார்.
அவரது அரசியல் வாழ்க்கையானது ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பினைக் கொண்டு வரையறுக்கப்படுகிறது.