இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை குறிக்கும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 31ஆம் தேதி தேசிய ஒற்றுமை தினமாகக் (ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்-National Unity Day) கொண்டாடப்படுகிறது.
சர்தார் வல்லபாய் பட்டேல் சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராவார்.
அவருடைய பிறந்த நாளையொட்டி “ஒற்றுமைக்கான ஓட்டம்” (Run for Unity) என்ற தலைப்பில் டெல்லி தயான் சந்த் விளையாட்டு அரங்கில்5 கி.மீ தொடர் ஓட்டம் நடத்தப்பட்டது.
இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா விருது” அவர் இறந்த பின்பு 1991ல் வழங்கப்பட்டது.
1947-49க்கு இடைப்பட்ட காலத்தில் 550 சுதந்திர மன்னர் மாநிலங்களை (சுதேச அரசுகள்) ஒருங்கிணைத்து இந்தியாவை வலுவான நாடாக உருவாக்கினார்.