இராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் அல்லது தேசிய ஒற்றுமை தினம் ஆனது சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.
அவர் 1947 முதல் 1950 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் முதல் துணைப் பிரதமராகவும், இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் இருந்தார்.
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, அனைத்து 565 சுதேச அரசுகளையும் இந்தியாவுடன் இணையுமாறு வலியுறுத்தி அதனை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் 150வது பிறந்த நாளை 2024 முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான இரண்டு ஆண்டு கால அளவில் நாடு தழுவிய ஒரு திட்டத்தின் மூலமாக அரசாங்கம் கொண்டாட உள்ளது.