TNPSC Thervupettagam

தேசிய ஒற்றுமை தினம் - அக்டோபர் 31

October 31 , 2019 1795 days 1618 0
  • தேசிய ஒற்றுமை தினமானது (ராஷ்டிரிய ஏக்தா திவாஸ்) இந்திய அரசால் 2014 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப்பட்டது.
  • லோக் புருஷ் என்றும் அறியப் படுகின்ற இந்தியாவின் இரும்பு மனிதரான வல்லபாய் ஜாவர்பாய் படேல் 1875 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று பிறந்தார்.
  • சர்தார் வல்லபாய் படேல் இந்தியக் குடியரசின் நிறுவனத் தந்தை என்று மிகவும் பிரபலமாக அறியப் படுகின்றார்.
  • ஏனென்றால், பிரிவினைக்குப் பின்னர் சுதந்திர மாகாணங்களை ஒருங்கிணைந்த இந்தியாவில் இணைப்பதில் அவர் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருந்தார்.
  • ஒருங்கிணைந்த இந்தியாவை நோக்கிய அவரது முயற்சிகளுக்காக, சர்தார் படேலின் பிறந்த நாள் ஆனது இப்போது தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப் படுகின்றது. இத்தினமானது ராஷ்டிரிய ஏக்தா திவாஸ் என்றும் அழைக்கப் படுகின்றது.

  • இந்த நாளைக் கொண்டாட, ‘இந்தியாவின் ஒருங்கிணைப்பாளரான’ சர்தார் வல்லபாய் படேல் உலகின் மிக உயரமான சிலையான ஒற்றுமைக்கான சிலையின் மூலம் கௌரவிக்கப் பட்டார்.
  • சர்தார் படேலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட, குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள இந்தச் சிலையானது சுமார் 182 மீட்டர் (597 அடி) உயரம் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்