TNPSC Thervupettagam

தேசிய ஒலிபரப்பு தினம் - ஜூலை 23

July 26 , 2024 37 days 113 0
  • 1923 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், மும்பை ரேடியோ கிளப் இந்தியாவின் முதன்முதல் வானொலி ஒலிபரப்பைத் தொடங்கியது.
  • இந்திய ஒலிபரப்பு நிறுவனம் (IBC) ஆனது நாட்டின் முதல் வானொலி நிறுவனமாக 1927 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.
  • IBC ஆனது பின்னர் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டு, 1936 ஆம் ஆண்டில் அது அகில இந்திய வானொலி (AIR) என மறுபெயரிடப்பட்டது.
  • 1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில், நாட்டில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, லக்னோ மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் ஆறு AIR வானொலி ஒலிபரப்பு நிலையங்கள் இருந்தன.
  • AIR நிறுவனத்தின் பெயர் பின்னர் 1956 ஆம் ஆண்டில் ஆகாசவானி என மாற்றப்பட்டது.
  • 90 மொழிகளில் சுமார் 650 செய்தித் துளிகளானவை AIR நிறுவனம் ஆக ஒன்றியுள்ள 262 வானொலி நிலையங்களால் ஒலிபரப்பப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்