தேசிய ஒலிபரப்பு தினம் – ஜூலை 23
July 24 , 2023
492 days
285
- நமது வாழ்வில் வானொலியின் தாக்கத்தை நினைவூட்டுவதே இந்த நாளின் நோக்கம் ஆகும்.
- அகில இந்திய வானொலி நிறுவனத்தினால், இந்தியாவில் ஒழுங்கமைக்கப் பட்ட வானொலி ஒலிபரப்புகள் தொடங்கப் பட்டதையும் இந்த நாள் குறிக்கிறது.
- 1927 ஆம் ஆண்டு ஜூலை 23, ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்த இந்திய ஒலிபரப்பு நிறுவனம் ஆனது இந்தியாவின் முதல் வானொலி நிறுவனமாக மாறியது.
- அகில இந்திய வானொலி (AIR) 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்திய ஒலிபரப்புச் சேவை வழங்கீட்டு நிறுவனமாக உருவானது.
- இதற்கு ஜூன் 08 ஆம் தேதியன்று அகில இந்திய வானொலி நிறுவனம் என மறு பெயரிடப் பட்டது.
- புகழ்பெற்ற ஆகாஷ்வாணி ராகமானது 1930 ஆம் ஆண்டில் இந்திய யூத அகதியான வால்டர் காஃப்மேன் என்பவரால் இயற்றப் பட்டது.
- 1941 ஆம் ஆண்டில் ஆங்கிலேய இந்தியாவின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் அகில இந்திய வானொலி நிறுவனம் வந்தது.
- அகில இந்திய வானொலி (AIR) ஆனது 1956 ஆம் ஆண்டு முதல் அதிகாரப் பூர்வமாக ‘ஆகாஷ்வாணி’ என்று அறியப்படுகிறது.
Post Views:
285