இந்திய நாடானது, தேசிய கடல்சார் கள விழிப்புணர்வு மையத்தினை (NMDAC) திறக்க உள்ளது.
இது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலவும் பல்வேறு புதிய ஆபத்துக்களை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
NMDAC தீவிரவாதம், கடற்கொள்ளையர், கடத்தல் மற்றும் சட்டவிரோத மீன்பிடித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
மும்பையில் 2008 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்கள் ஆனது, 2014 ஆம் ஆண்டில் தகவல் மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு மையம் (IMAC) உருவாக வழி வகுத்தது.
தகவல் இணைவு மையம்-இந்தியப் பெருங்கடல் பகுதி (IFC-IOR) ஆனது 2018 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.