TNPSC Thervupettagam

தேசிய கடல்சார் தினம் - ஏப்ரல் 5

April 11 , 2018 2419 days 2011 0
  • ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 5ம் தேதி இந்தியாவில் தேசிய கடல்சார் (Maritime) தினமாக கொண்டாடப்படுகிறது. இது முதன் முதலாக 1964ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது.‘
  • 1919ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி அன்று சிந்தியா கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின் முதல் கப்பலான SS லாயல்ட்டி (SS Loyalty) என்ற கப்பல் ஐக்கியப் பேரரசிற்கு பயணிக்க ஆரம்பித்ததில் கடற்பயண வரலாறு ஒன்று உண்டாக்கப்பட்டது.
  • கடல் வழி மார்க்கங்கள் பிரிட்டிஷாரால் கட்டுப்படுத்தப்பட்ட சமயத்தில் இந்த கடல் பயணம் இந்திய கப்பல்துறை வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்பமாகும்.
  • 55வது பதிப்பு தேசிய கடல் சார் தினம் - 2018ம் ஆண்டின் கருத்துரு - “இந்திய கப்பல்துறை - வாய்ப்புகளின் பெருங்கடல்”.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்