ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 05 அன்று தேசிய கடல்சார் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
இத்தினமானது உலகெங்கிலும் உள்ள கண்டங்களுக்கிடையே பாதுகாப்பான மற்றும் சுற்றுச் சுழலுக்கு உகந்த வணிகத்தை ஆதரிப்பது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2019 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துருவானது, “இந்தியப் பெருங்கடல் - வாய்ப்பிற்கான கடல்” என்பதாகும்.
இத்தினமானது முதன் முறையாக 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 அன்று அனுசரிக்கப்பட்டது.
1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 அன்று மும்பையிலிருந்து இலண்டனிற்கு இயக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது கப்பலான சிந்தியா நீராவி கடற்பயண நிறுவனத்தின் கப்பலான எஸ்எஸ் லாயல்டியின் பயணத்தின் வாயிலாக இந்தியாவின் முதலாவது கடற் பயணம் தொடங்கப் பட்டது.
1906 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த வ. உ. சிதம்பரம், தனது சுதேசி கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். அதன் முதலாவது கப்பல் எஸ்எஸ் கலியா என்பதாகும்.