இந்தத் தினமானது, இந்தியக் கணிதவியலாளர் சீனிவாச இராமானுஜர் அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
இந்தத் தினம் ஆனது கணிதத் துறையில் அவர் ஆற்றிய உள்ளார்ந்தப் பங்களிப்பினை அங்கீகரிப்பதற்காகவும், ஒரு நவீன சமுதாயத்தினை வடிவமைப்பதில் கணிதப் பாடம் வகிக்கும் முக்கியப் பங்கை எடுத்துரைப்பதற்காகவும் அனுசரிக்கப்படுகிறது.
2012 ஆம் ஆண்டில், இராமானுஜர் அவர்களின் 125வது பிறந்தநாளில் அப்போதையப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் இத்தின அனுசரிப்பானது அதிகாரப் பூர்வமாக தொடங்கப்பட்டது.