சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 11 ஆம் தேதி தேசிய கல்வி தினமாகக் கொண்டாடப்படுகிறது.
நாட்டிலுள்ள கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துவதும், சிறந்த மேம்பாட்டிற்கு நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்துவதுமே தேசிய கல்வி தின கொண்டாட்டத்தின் நோக்கங்களாகும்.