TNPSC Thervupettagam

தேசிய கல்வி தினம் - நவம்பர் 11

November 20 , 2022 643 days 360 0
  • இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 11 ஆம் தேதியன்று இந்தத் தினமானது கொண்டாடப்படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘பாடத் திட்டத்தினை மாற்றுதல், கல்வியை மாற்றுதல்’ என்பதாகும்.
  • அவர் ஒரு அறிஞர், கல்வியாளர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார் என்பதோடு, அவர் சுதந்திர இந்தியாவின் கல்வி முறையின் மேம்பாட்டில் ஒரு முக்கியப் பங்கையும் வகித்தவர் ஆவார்.
  • இவருக்கு 1992 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அவரது மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது.
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், இந்திய அறிவியல் கல்வி நிறுவனங்கள் மற்றும் கட்டிடக்கலை மற்றும் கட்டிட வரைபடமாக்கல் கல்லூரி ஆகியவற்றை நிறுவுவதில் இவரது கருத்தாக்கமே காரணக் கர்த்தாவாகும்.
  • தேசிய கல்வி தின கொண்டாட்டம் ஆனது முதல் முறையாக 2008 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதியன்று அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்