இத்தினமானது சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்தநாளினைக் குறிக்கிறது.
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் 1958 ஆம் ஆண்டு பிப்ரவரி 02 ஆம் தேதி வரை அவர் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார்.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி சபை (AICTE) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) உள்ளிட்ட உயர் கல்வி அமைப்புகளை நிறுவியதில் அவர் ஒரு முக்கியப் பங்கினைப் கொண்டுள்ளார்.
அவர் காரக்பூரில் முதல் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தையும் நிறுவினார்.
இந்தியக் கலாச்சார உறவுகள் சபை (ICCR), சாகித்ய அகாடமி, லலித் கலா அகாடமி, சங்கீத நாடக அகாடமி மற்றும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபை (CSIR) ஆகியவையும் அவரது வழிகாட்டுதலின் கீழ் அமைக்கப்பட்டன.