TNPSC Thervupettagam

தேசிய கல்வி நாள் - நவம்பர் 11

November 13 , 2020 1387 days 624 0
  • இது இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளை நினைவு கூர்கிறது.
  • மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள் 1947 ஆம் ஆண்டு முதல் 1958 ஆம் ஆண்டு வரை ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் முதல் கல்வி அமைச்சராக நாட்டிற்குச் சேவை செய்தார்.
  • சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக, இவர் டெல்லியில் மத்தியக் கல்வி நிறுவனம் அமைவதற்குக் காரணமாக இருந்தார்.
  • இது பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் கல்வித் துறை என்று அறியப் பட்டது.
  • 1953 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழு அமைவதற்கு இவர் முக்கியக் காரணமாவார். மேலும் இவர் பெங்களூரில் இந்திய அறிவியல் நிறுவனத்தை அமைக்க வலியுறுத்தினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்