TNPSC Thervupettagam

தேசிய கல்விக் கருவூலம் (NAD - National Academic Depository)

July 18 , 2017 2687 days 1217 0
  • தேசிய கல்விக் கருவூலம் (NAD) என்பது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் கூட்டு முயற்சி ஆகும். இது "கணினிமய இந்தியா" (Digital India) திட்டத்தின் கீழ் (கல்விப் பதிவுகளை / ஆவணங்களை கணினிமயம் ஆக்க) மேற்கொள்ளப்பட்ட புதுமையான முற்போக்கான முயற்சி.
  • "கணினிமய கல்விச் சான்றிதழ்கள் (Digital Academic Certificates) என்பதை ஒவ்வொரு இந்தியருக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது என்.ஏ.டி யின் நாட்டம் ஆகும்.
  • கணினி மயமான, நம்பகமான, சரிபார்த்துக் கொள்ளக் கூடிய இணையவழிச் சான்றிதழ்கள், காகித சான்றிதழ்களை அச்சடிப்பதிலும் பராமரிப்பதிலும் உண்டாகும் சிக்கல்களை குறைக்க / அகற்ற உதவும்.
  • என்.டி.எம்.எல் (National Database Management Limited - NDML) ஆனது கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் என்.ஏ.டி (NAD) கணக்குகளுக்கு நேரடியாக கல்விச் சான்றிதழ்களை வழங்க ஏற்பாடுகளை செய்யவுள்ளது.
  • இந்த சான்றிதழ்களை மாணவர்கள் எந்நேரத்திலும் காண முடியும். மேலும் வங்கிகள் / வேலை வழங்கும் நிறுவனர்கள் காண அனுமதிக்கவும் முடியும்.
  • அச்சடித்த சான்றிதழ்களையும், பிற ஆவணங்களையும் கையில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நகல்களை சமர்ப்பிக்கும் தேவைகளும் குறையும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்