TNPSC Thervupettagam

தேசிய காற்று-சூரியஒளி கலப்புக் கொள்கை

May 17 , 2018 2387 days 1397 0
  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் தேசிய காற்று-சூரியஒளி கலப்புக் கொள்கையை வெளியிட்டுள்ளது. புதிய திட்டங்களை ஊக்குவிப்பது மற்றும் ஏற்கனவே உள்ள திட்டங்களை கலப்பாக்குவது (hybridisation) ஆகியவற்றின் மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை அதிகரிப்பதை இக்கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மின்சாரத்தை அனுப்புவதற்கான உட்கட்டமைப்பு மற்றும் நிலங்களின் திறனான பயன்பாட்டிற்காக பெரிய மின்கம்பிவடம் இணைக்கப்பட்ட காற்று-சூரியஒளி ஒளி மின்னழுத்த கலப்பு அமைப்பினை (Wind-solar Photo Voltaic hybrid system) ஊக்குவிப்பதற்காக விரிவான கட்டமைப்பை வழங்குவதை இக்கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மத்திய அரசு, 2022ல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களிலிருந்து 175 GW மின்சார உற்பத்தியை அடைவதற்கு இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்த ஆற்றலானது 100 GW சூரியஒளி ஆற்றல் மற்றும் 60 GW காற்று ஆற்றல் திறன்களை உள்ளடக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்