TNPSC Thervupettagam

தேசிய காலநிலைப் பாதிப்பு அறிக்கை

April 23 , 2021 1187 days 624 0
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையானது சமீபத்தில் தேசிய காலநிலைப் பாதிப்பு அறிக்கையினை வெளியிட்டது.
  • இந்த அறிக்கை தற்போதைய காலநிலை அபாயங்கள் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும் முக்கியக் காரணிகள் ஆகியவற்றைப் பொறுத்து இந்தியாவில் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை அடையாளம் காணுகிறது.
  • இந்த அறிக்கையின் படி, நாட்டின் எட்டு கிழக்கு மாநிலங்கள் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படக் கூடும்.
  • அவை மிசோரம், பீகார், மேற்கு வங்காளம், அருணாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் அசாம் ஆகியனவாகும்.
  • அசாம், ஜார்க்கண்ட் மற்றும் பீகார் ஆகியவை 60%க் என்ற அளவிற்கும் மேலான “அதிகம் பாதிப்புக்குள்ளாகும் மாவட்டங்கள்” எனும் பிரிவினைச் சேர்ந்த மாவட்டங்களைக் கொண்டுள்ளன.
  • ஜார்க்கண்ட் 0.67 எனும் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் குறியீட்டினைப் பெற்றுள்ளது.
  • ஜார்க்கண்ட்டைடுத்து மிசோரம், ஒடிசா, சத்தீஸ்கர், அசாம், பீகார் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகியவை இக்குறியீட்டில் இறங்குவரிசையில் உள்ளன.
  • இவை “ஒப்பீட்டளவில் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்கள்” என பெயரிடப் பட்டுள்ளன.
  • மகாராஷ்டிரா 0.42 என்ற மிகக்குறைவான பாதிப்புக்குள்ளாகும் குறியீட்டு அளவினைப் பெற்றுள்ளது.
  • மகாராஷ்டிராவைத் தவிர கோவா, கேரளா, தமிழ்நாடு ஹரியானா ஆகிய மாநிலங்கள் மிகவும் குறைவான பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்களாக உள்ளன.
  • இவை “மிகவும் குறைவான பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்கள்” எனப் பெயரிடப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்