TNPSC Thervupettagam

தேசிய கிராமப்புற குடிநீர் திட்டம்

November 13 , 2017 2597 days 841 0
  • தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்தின் (National Rural Drinking Water Programme-NRDWP) தொடர்ச்சிக்கும், மறுசீரமைப்புக்கும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • கிராமப்புற பகுதிகளுக்கு சிறந்த தரத்திலான குடிநீர் வழங்கல் சேவையை உறுதி செய்வதற்காக, வெளியீடு அடிப்படையிலான, போட்டித் திறனுடைய, விநியோகத் திட்டத்தினுடைய நீடித்த செயல்பாட்டின் மீது அதிகரிக்கப்பட்ட கவனத்தோடு சிறந்த கண்காணிப்பை உருவாக்குவதற்காக இந்த மறுசீரமைப்பும், திட்ட தொடராக்கமும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • இத்திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊரகப் பகுதிகளையும் உள்ளடக்க உள்ளது.
  • 14-வது நிதிக்குழுவின் செயற்கால சுழற்சியோடு ஒருங்கமையும் வகையில் 2020 வரை நீடிக்க இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • நீடித்த குழாய் வழியிலான குடிநீரை  பெறும் பயனாளிகளின் அளவை அதிகரிக்க   இது உதவி புரியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்