1 முதல் 19 வயது வரையிலான அனைத்து குழந்தைகளிடத்தும் குடற்புழுத் தொற்றுகளை குணப்படுத்த ஒரு ஒற்றை நிலையான அணுகுமுறை கொண்ட தினமே தேசிய குடற்புழு நீக்க தினமாகும்.
இந்த தினம் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 10ம் தேதியும் ஆகஸ்டு 10ம் தேதியும் அனுசரிக்கப்படுகிறது.
குழந்தைகளில் உண்டாகும் நாடு தழுவிய பொதுசுகாதார அச்சுறுத்தலான குடற்புழுத் தொற்று மற்றும் அது தொடர்பான குறைபாட்டை கையாளுவதே இத்தின அனுசரிப்பின் நோக்கமாகும்.
மிகவும் பொதுவான நோய் தொற்றுகளில் ஒன்றான மண் பரவு குடற்புழுவின் (Soil Transmitted Helminth-STH) கட்டுப்படுத்துதலில் சுகாதார முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்னுரிமை அளிப்பதற்காக மருத்துவ வல்லுனர்கள், மாநில அரசு மற்றும் பிற பங்கெடுப்பாளர்களை ஒருங்கிணைப்பதற்காக இத்தினம் அனுசரிக்கப் படுகிறது.