TNPSC Thervupettagam

தேசிய குடிமக்கள் பதிவேடு: இறுதி வடிவம் - அசாம்

September 1 , 2019 1786 days 661 0
  • தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (National Register of Citizens - NRC) இறுதிப் பட்டியலை அசாம் வெளியிட்டு இருக்கின்றது.
  • 3,30,27,661 விண்ணப்பதாரர்களில் 3,11,21,004 மக்கள் இந்த இறுதி NRC பட்டியலில் சேர்த்திட தகுதி உள்ளவர்கள் எனக் கண்டறியப் பட்டிருக்கின்றனர்.
  • 19 லட்சம் மக்கள் இப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
  • அரசு இப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றத்தில் முறையிட வேண்டி 120 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.
  • அவர்கள் இப்பட்டியலுக்கு எதிராக ஒரு பகுதி நீதிசார் அமைப்பான வெளிநாட்டவர் தீர்ப்பாயத்திலும் அதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் ஆகியவற்றிலும் முறையிடலாம்.
இது பற்றி
  • தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது பாகிஸ்தானிடமிருந்து இந்தியாவின் அண்டை நாடான வங்க தேசம் தனது சுதந்திரத்தை அறிவித்த நாளான 1971 ஆம் ஆண்டின் மார்ச் 24ம் தேதிக்கு முன்பு அசாமிற்குள் குடியேறிய மக்கள் என்று நிரூபிக்க முயலும் மக்களின் பட்டியலாகும்.
  • முதல் தேசிய குடிமக்கள் பதிவேடு 1951ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. இது அவ்வருடத்திய அசாம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது.
  • இந்த 34 வருடங்களில் இவ்வகையிலான தேசிய குடிமக்கள் பதிவேடு அசாமில் வெளியிடப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்