நமது குடிமைப் பணியாளர்கள் ஆற்றிய மகத்தான மற்றும் சிறப்பான பணிகளைக் கொண்டாடுவதற்காகவும், குடிமக்களின் நலனுக்காக அவர்கள் தங்களை மீண்டும் அர்ப்பணிப்பதற்கான வாய்ப்பாகவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
1947 ஆம் ஆண்டு இதே நாளில் தான், சுதந்திர இந்தியாவின் அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் தகுதிகாண் நிர்வாக அதிகாரிகளிடம் உரையாற்றினார்.
தனது உரையின் போது அவர் குடிமைப் பணியாளர்களை 'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்று குறிப்பிட்டார்.