- செல்வக் குறியீடு ஒன்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தால் தேசிய குடும்ப நல மற்றும் சுகாதாரக் கணக்கெடுப்பு வரிசை நான்கிலிருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டது.
- இவ்வறிக்கையின் படி, தில்லி மிகவும் பண வசதி பெற்ற மாநிலமாகும். அதைத் தொடர்ந்து பஞ்சாபும், கோவாவும் உள்ளன.
- ஜெயின் அல்லது சமண சமூகத்தினர் இந்தியாவின் மிகவும் பண வசதி படைத்த சமூகமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த வரிசையில் சீக்கிய மதத்தினர் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
- பீகார் இந்தியாவின் மிக ஏழை மாநிலமாக உள்ளது.
- உயர் ஜாதியினர் மொத்த மக்கள் தொகையில் அதிக சொத்துக்கள் கொண்ட பட்டியலில் மிகப் பெரிய பங்கினைக் கொண்டுள்ளனர்.
- பழங்குடியின மக்கள் மிகவும் ஏழைகளாக குறைந்த சொத்துகள் கொண்ட பட்டியலில்9 சதவிகித அளவிற்கு இடம் பெற்றுள்ளனர்.
செல்வக் குறியீடு
- தேசிய குடும்பநல மற்றும் சுகாதார கணக்கெடுப்பு வரிசை நான்கின் (National Family and Health Survey – NFHS 4) ஒரு பகுதியாக நுகர்வுப் பொருட்களான தொலைக்காட்சி, மிதிவண்டிகள், வீட்டு உபயோகப் பொருட்களைக் கொண்டிருப்பது, வீட்டிற்கு தேவையான மற்றும் அடிப்படை வசதிகளைக் கொண்டிருப்பது (உதாரணமாக சுத்தமான குடிநீர்) போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு செல்வக் குறியீடு தயாரிக்கப்பட்டது.
தேசிய குடும்ப நல மற்றும் சுகாதார கணக்கெடுப்பு
- தேசிய குடும்பநல மற்றும் சுகாதார கணக்கெடுப்பு, இந்தியா முழுவதும் வசிக்கும் குடும்பங்கள் மற்றும் வீடுகளை மாதிரியாக பிரதிபலிக்கும் அடிப்படையில் எடுக்கப்படும் ஒரு மிகப் பெரிய, பல சுற்று கணக்கெடுப்புகளைக் கொண்ட ஓர் அறிக்கை ஆகும்.
- முதல் கணக்கெடுப்பு 1992-93ஆம் வருடத்தில் நடத்தப்பட்டது. அதிலிருந்து தற்போது வரை மூன்று கட்ட கணக்கெடுப்புகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
- இந்த கணக்கெடுப்பிற்காக ஒத்துழைப்பு ஏற்படுத்துதல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை அளித்தல் ஆகியவற்றுக்கான பொறுப்புள்ள நிறுவனமாக மும்பையைச் சேர்ந்த சர்வதேச மக்கள் தொகை அறிவியல் நிறுவனம் (International Institute of Population Studies - IIPS) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.