TNPSC Thervupettagam

தேசிய குற்ற ஆவணங்கள் செயலகமானது )National Crime Records Bureau - NCRB), காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செயலகத்துடன் )The Bureau of Police Research and Development - BPRD) இணைக்கப்பட்டுள்ளது

August 9 , 2017 2535 days 1029 0
  • தேசிய குற்ற ஆவணங்கள் செயலகமானது ) National Crime Records Bureau - NCRB), காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செயலகத்துடன் ) The Bureau of Police Research and Development - BPRD) இணைக்கப்பட்டுள்ளது.
  • காவல்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் முன்னேற்றவும் இந்த இணைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இணைக்கப்பட்ட புதிய குழுவின் தலைவராக காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செயலகத்தின் )BPRD) இயக்குனர் ஜெனரல் (Director General - DG) பதவி வகிப்பார்.
  • தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகம் (National Crime Records Bureau - NCRB) என்பது நாடு முழுவதும் நடக்கும் குற்றங்களின் தரவுகளை சேகரித்து , பல அளவுருக்களின் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்தி பராமரிக்கும் மத்திய காவல்துறை நிறுவனம் ஆகும்.
  • குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு பிணைப்பினை (Crime and Criminal Tracking Network - CCTNS) செயல்படுத்தும் நிறுவனம் தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகம் ஆகும்.
  • காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செயலகமானது (The Bureau of Police Research and Development - BPRD) காவல்துறை தொடர்பான ஆய்வு, ஆராய்ச்சி மற்றும் திட்டங்களை வகுப்பதற்காக தொடங்கப்பட்ட மத்திய காவல்துறை மேம்பாட்டு நிறுவனம் ஆகும்.
  • இந்த இரண்டு நிறுவனங்களும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்