TNPSC Thervupettagam

தேசிய குழந்தைகள் தினம் - நவம்பர் 14

November 15 , 2020 1385 days 434 0
  • இந்நாள் குழந்தைகளின் உரிமைகள், குழந்தைகளின் கவனிப்பு மற்றும் அவர்களின் கல்வி குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க இந்தியா முழுவதும் கொண்டாடப் படுகிறது.
  • இது இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவைப்  போற்றும் வகையில் கொண்டாடப் படுகிறது.
  • அவர் 1889 ஆம் ஆண்டில் இந்நாளில் பிறந்தார்.
  • முதல் குழந்தைகள் தினமானது 1954 ஆம் ஆண்டில் கொண்டாடப் பட்டது.
  • உலகளாவிய குழந்தைகள் தினம் என்ற ஒரு கருத்து வி.கே. கிருஷ்ண மேனன் என்பவரால் பரிந்துரை செய்யப் பட்டது.
  • முதலில், இது அக்டோபர் மாதத்தில் உலகளவில் கொண்டாடப் பட்டது.
  • 1959 ஆம் ஆண்டிற்குப் பிறகு, நவம்பர் 20 ஆம் தேதியானது குழந்தைகள் தினமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது.
  • ஐ.நா பொதுச் சபையால் குழந்தைகளின் உரிமைகள் மீதான பிரகடனம் ஏற்றுக் கொள்ளப் பட்ட நாளை இது குறித்தது.
  • 1989 ஆம் ஆண்டில், குழந்தைகளின் உரிமைகளுக்கான ஒரு உடன்படிக்கையும் இதே தேதியில் கையெழுத்தானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்