தேசிய கைத்தறி தினம் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு 7ம் தேதியன்று நாடு முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்களை போற்றும் வண்ணம் அனுசரிக்கப்படுகின்றது.
இந்த வருடம் தேசிய கைத்தறி தினத்தின் மூன்றாவது பதிப்பாகும்.
பின்னணி
2015ம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு ஆகஸ்டு 7ம் தேதியை தேசிய கைத்தறி தினமாக அறிவித்தது.
பிரிட்டிஷ் அரசால் ஏற்படுத்தப்பட்ட வங்கப் பிரிவினைக்கு எதிராக போராடுவதற்காக இதே தினம் 1905ஆம் ஆண்டில் கல்கத்தாவின் டவுன் ஹாலில் ஆரம்பிக்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவு கூர்வதற்காக ஆகஸ்டு 7ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது.
2015ம் ஆண்டு ஆகஸ்டு 7ம் தேதியன்று, தமிழ்நாட்டில் சென்னையில் பிரதமர் நரேந்திர மோடியால் முதல் தேசிய கைத்தறி தினம் அனுசரிக்க ஆரம்பிக்கப்பட்டது.