TNPSC Thervupettagam

தேசிய கைத்தறி தினம் – ஆகஸ்ட் 07

August 10 , 2021 1115 days 487 0
  • இந்தியக் கைத்தறித் தொழில்துறையின் மரபினை உணர்த்தும் வகையில் இந்தியா தனது 7வது தேசிய கைத்தறி தினத்தினைக் கொண்டாடியது.
  • கைத்தறியானது இந்தியாவின் மரபு’ (Handloom, an Indian legacy) என்பதே இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துருவாகும்.
  • சுதேசி இயக்கத்தினை நினைவு படுத்தவும், நாட்டின் பொலிவுமிக்க துணி இழைகள் மற்றும் வண்ணமயமான நெசவு முறைகளைக் கொண்டாடவும் இந்த தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
  • இந்தியக் கைத்தறித் தொழில்துறையின் மரபினை வெளிப்படுத்தவும் நாட்டிலுள்ள நெசவாளர்களைக் கௌரவிக்கவும் நாடு முழுவதும் இத்தினம் அனுசரிக்கப் படுகின்றது.
  • இத்தினமானது முதன்முதலாக 2015 ஆம் ஆண்டில் இந்திய அரசினால் அனுசரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்