கோவையைச் சேர்ந்த இளம் பொறியாளரான தீரஜ் ராம் கிருஷ்ணா, கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்திக்காக மத்திய அரசிடம் இருந்து தேசிய கோபால் ரத்ன விருதை வென்றுள்ளார்.
பால் உற்பத்திக்கான சிறந்த மிருகங்களில் உள்நாட்டு வகைகளை பாதுகாத்தமைக்காக புதுதில்லியில் மத்திய விவசாய மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கிடம் இருந்து அவர் அவ்விருதைப் பெற்றார்.