TNPSC Thervupettagam

தேசிய சட்ட சேவை தினம் - நவம்பர் 09

November 13 , 2022 651 days 211 0
  • இந்தத் தினமானது, 1987 ஆம் ஆண்டு சட்ட சேவைகள் ஆணையச் சட்டத்தின் தொடக்கத்தை நினைவு கூருகிறது.
  • 1987 ஆம் ஆண்டின் சட்ட சேவைகள் அதிகாரச் சபை சட்டமானது 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதியன்று இயற்றப்பட்டது.
  • இது 1995 ஆம் ஆண்டு நவம்பர் 09 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்தது.
  • இந்திய உச்ச நீதிமன்றம் ஆனது 1995 ஆம் ஆண்டில் தேசிய சட்ட சேவைகள் தினத்தை நிறுவியது.
  • சட்ட சேவைகள் ஆணையச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கமாகும்.
  • மேலும், இது மனுதாரர்களின் உரிமைகளை அவர்களுக்கு நினைவூட்டுவதற்கான ஒரு தினமாகும்.
  • தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA) ஆனது 1987 ஆம் ஆண்டு சட்ட சேவைகள் ஆணையச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.
  • இந்தியத் தலைமை நீதிபதி இந்த அமைப்பின் புரவலத் தலைவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்