இந்த தினமானது இந்திய சட்ட உதவிகள் ஆணையச் சட்டம் 1987 ஆம் ஆண்டு இயற்றப் பட்டதை நினைவு கூர்கிறது.
இந்தச் சட்டமானது 1995 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்தியாவின் தேசிய சட்ட உதவிகள் ஆணையம் (National Legal Services Authority - NALSA) இந்தச் சட்ட விதிகளின் படி 1995 ஆம் ஆண்டு டிசம்பர் 5 அன்று அமைக்கப் பட்டது.
சட்ட உதவிகள் ஆணையச் சட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு விதிகள் மற்றும் வழக்குத் தொடுப்பவர்களின் உரிமை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தத் தினம் அனுசரிக்கப் படுகிறது.
தேவைப்படுவோருக்கு இலவச சட்ட உதவி மற்றும் ஆலோசனை வழங்குவது, மத்தியஸ்தம் மூலம் வழக்குகளைத் தீர்ப்பது மற்றும் இணக்கமான தீர்வுகள் அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை NALSA மேற்கொள்கின்றது.