TNPSC Thervupettagam

தேசிய சமூகத் தொழிற்முனைவோர் கருத்தாக்க போட்டி

October 27 , 2017 2633 days 927 0
  • பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை புனரமைவுக்கு பயன்படத்தக்க தற்காலிக இருப்பிடங்களை வடிவமைப்பதற்காக பெங்களூருவிலுள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தால் தேசிய சமூகத் தொழிற்முனைவோர் கருத்தாக்க சவால் போட்டி நடைபெற்றது. இதில் சென்னை ஐஐடியைச் சேர்ந்த கோபிநாத், R. ஸ்ரீராம், G.U. சந்தோஸ் ஆகிய மாணவர்கள் முதல் பரிசைப்பெற்றனர்.
  • இந்த மட்டுக் கட்டமைப்பு வீடானது செலவு குறைந்ததாகவும், எளிதில் இடம் மாற்றக்கூடியதாகவும், விரைவாக அமைக்கும் வசதியுடையதாகவும் உள்ளது. மேலும் வழக்கமான கட்டுமான முறைகள் அளிக்காத வசதிகளான முழுப்பாதுகாப்பு, தனிமை மற்றும் மின் காப்பு உடைய மின்வசதி போன்ற வசதிகளையும் உடையது.
  • வேளாண் கழிவுகள் மற்றும் வைக்கோலைப் பயன்படுத்தி வலுப்படுத்தப்பட்ட ஒலி ஓடுகளை உருவாக்கியமைக்காக கோவை குமரகுரு தொழிற்நுட்ப கல்லூரியைச் சேர்ந்த அகில் கிருஷ்ஸபா மற்றும் ரஞ்சித் குமாருக்கு இரண்டாவது பரிசு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்