TNPSC Thervupettagam

தேசிய சமையல் எண்ணெய்கள் திட்டம்

October 9 , 2024 14 hrs 0 min 34 0
  • மத்திய அமைச்சரவை தேசிய சமையல் எண்ணெய் - எண்ணெய் வித்துக்கள் (NMEO-Oilseeds) திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது உள்நாட்டு எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவை (சுயசார்பு) அடைவதை முதல் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டம் ஆனது 2024-25 முதல் 2030-31 ஆம் ஆண்டு வரையிலான ஏழு ஆண்டு காலப் பகுதியில் செயல்படுத்தப்பட உள்ளது.
  • புதிதாக அங்கீகரிக்கப்பட்ட NMEO-எண்ணெய் வித்துக்கள் திட்டம் ஆனது, ராப்சீட்-கடுகு, நிலக்கடலை, சோயா அவரை, சூரியகாந்தி மற்றும் எள் போன்ற முக்கிய பிரதான எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை மேம்படுத்துவதில் பெரும் கவனம் செலுத்தும்.
  • 2030-31 ஆம் ஆண்டிற்குள் பிரதான எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை சுமார் 39 மில்லியன் டன்னிலிருந்து (2022-23) சுமார் 69.7 மில்லியன் டன்னாக உயர்த்துவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்