அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகள் என்ற கருத்தினைப் பரப்புவதற்காக 2025 ஆம் ஆண்டு ஜனவரி 01 முதல் 31 ஆம் தேதி வரையில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்படுகிறது.
பல்வேறு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் அனைத்து பங்குதாரர்கள், குடி மக்கள் மற்றும் இளையோர்களையும் நன்கு ஒன்றிணைப்பதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலகளாவியச் சாலை விபத்துகளில் 11% மற்றும் உலகளாவிய உயிரிழப்புகளில் 10% இந்தியாவில் தான் நிகழ்கிறது.
உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “சடக் சுரக்சா - ஜீவன் ரக்சா” என்பதாகும்.